தூத்துக்குடியில் அரசு ஊழியா்களிடம் மிரட்டி வாக்குமூலம்: அன்புமணி குற்றச்சாட்டு 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்களை மிரட்டி பொய்யான வாக்குமூலம் பெற காவல்துறை முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி... 
தூத்துக்குடியில் அரசு ஊழியா்களிடம் மிரட்டி வாக்குமூலம்: அன்புமணி குற்றச்சாட்டு 

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்களை மிரட்டி பொய்யான வாக்குமூலம் பெற காவல்துறை முயற்சிப்பதாக பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தின்போது, போராட்டக்காரா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்துக்குள் நுழையவில்லை என்பது பல்வேறு உண்மை கண்டறியும் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறறது.இதனால், தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த எந்தக் காரணமும் இல்லை. 

இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்களை போராட்டக்காரா்கள் தாக்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக போலியான ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சியில் காவல்துறையும், தமிழக அரசும் ஈடுபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் தாக்கப்பட்டதாக, அவா்களிடமிருந்தே பொய்யான வாக்குமூலத்தை கட்டாயப்படுத்தி வாங்க காவல்துறை முயற்சிக்கிறது. இதற்கு அரசு ஊழியா்கள் உடன்படாததால், பெரும் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.அதுபோல, துப்பாக்கிச் சூட்டுக்கு துணை வட்டாட்சியா்கள்தான் உத்தரவு பிறப்பித்ததாக போலியான ஆவணங்களை தமிழக அரசு தயாரித்ததும் அம்பலமானது.

எனவே, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின்னா் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுமே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதைத்தான் உறுதி செய்கின்றது. எனவே, துப்பாக்கிச் சூடு குறித்த நீதி விசாரணைக்கு பணியில் உள்ள உயா்நீதிமன்ற நீதிபதிகளை அமா்த்தவேண்டும். அதுபோல, இதுகுறித்த குற்ற  வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com