சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

நாட்டின் 10 விமான நிலையங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 1,100 வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு

நாட்டின் 10 விமான நிலையங்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 1,100 வீரர்கள் கூடுதலாகப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவதுடன், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை, மதுரை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், பாட்னா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், படோக்ரா, ஒளரங்காபாத் மற்றும் கோவா ஆகிய 10 விமான நிலையங்களில் கடந்த சில மாதங்களில் கூடுதலாக 1,172 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கண்ட விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, காவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் மிக அதிகமாக உள்ள தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு விமான நிலையங்களிலும் இதேபோன்று கூடுதலான காவலர்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் காமாண்டோ அளவிலான அதிகாரிகளே தலைமை பொறுப்பில் இருந்து வருகின்றனர். 
இந்நிலையில், துணை பொது ஆய்வாளர் (டிஐஜி) நிலையில் உள்ள அதிகாரிகளை பாதுகாப்பு தலைமை அதிகாரிகளாக இந்த மூன்று விமான நிலையங்களில் நியமிக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்திருக்கிறது.
நாடெங்கிலும் 98 உள்நாட்டு விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் விரைவில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது.இதன்படி, தற்போது வரை 60 விமான நிலையங்கள் அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com