எய்ட்ஸ் தடுப்பு நிதி குறைப்பு: நோயாளிகள் புகார்

எச்ஐவி எய்ட்ஸ் நோயின் தடுப்பு மற்றும் ஆதரவுப் பணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று நோயாளிகள் தெரிவித்தனர்.


எச்ஐவி எய்ட்ஸ் நோயின் தடுப்பு மற்றும் ஆதரவுப் பணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த நிதி குறைக்கப்பட்டுள்ளது என்று நோயாளிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு பாசிட்டிவ் பீப்புள் நெட்வோர்க்' அமைப்பின் இயக்குநர் ராம பாண்டியன் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம். எய்ட்ஸ் நோய்த் தடுப்பு மற்றும் ஆதரவுப் பணிகளை மேற்கொள்ளும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி மத்திய அரசால் ஒதுக்கப்பட்டது. தற்போது அந்த நிதி ரூ.3.50 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த களப்பணியாளர்களின் எண்ணிக்கை 300-இலிருந்து 170-ஆகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக இந்தப் பணிகளிலும் தொய்வு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2024-இல் எய்ட்ஸ் இல்லாத இந்தியா' என்ற நிலையை மத்திய அரசால் எட்ட முடியாது. எனவே, நிதி ஒதுக்கீட்டை ஏற்கெனவே இருந்தது போன்று வழங்க வேண்டும்.
மேலும் இந்த நோய்க்கு வழங்கப்படும் கூட்டு மருந்துகளுக்கான விலை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பின்னர் அதிகரித்துள்ளது. இதனால் மருந்துகளை வாங்குவதற்கு பணம் இல்லாமல் நோயாளிகள் தவிர்க்கின்றனர். இந்த மருந்துகளுக்கான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com