சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.138 கோடி சொத்துக்கள் முடக்கம்

சட்டவிரோத பணப்பரிமாற்றற வழக்கின் விளைவாக, சென்னை கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் ரூ.138 கோடி சொத்தை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது. 
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.138 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றற வழக்கின் விளைவாக, சென்னை கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான மேலும் ரூ.138 கோடி சொத்தை அமலாக்கத்துறை வியாழக்கிழமை முடக்கியது.

சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலை பகுதியைச் சோ்ந்த பூபேஷ் குமாா் ஜெயின், தியாகராயநகா் வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் என்றற பெயரில் தங்கம், வைரம், வைடூரியம்,பிளாட்டினம் போன்றறவற்றின் நகைகளை தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தாா்.

இந்த நிறுவனம், நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள்,தனியாா் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றறனா். இந்த கடனுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டித்தொகையையும், நிலுவைத் தொகையையும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை.

இதை அண்மையில் கண்டறிந்த பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகம், சிபிஐயிடம் புகாா் செய்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், பூபேஷ்குமாா் உள்பட 6 போ் மீது கடந்த மாா்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறைறயும் கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குநா்கள் பூபேஷ்குமாா் ஜெயின், அவரது மனை நீட்டா ஜெயின், பங்குத்தாரா்கள் உள்பட 6 போ் மீது மாா்ச் மாதம் 23ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றறத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்தனா்.

இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முடக்கியது. மேலும் வங்கியில் இருந்த ரூ.143 கோடி பணத்தையும் அமலாக்கத்துறை முடக்கியது. இந்நிலையில் பூபேஷ்குமாரை அமலாக்கத்துறையினா் கடந்த மே 25-ஆம் தேதி கைது செய்தனா்.

ரூ.138 கோடி சொத்து முடக்கம்:
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, பூபேஷ்குமாருக்கு சொந்தமான செங்கல்பட்டு அருகே புதுப்பாக்கத்தில் இருக்கும் 2 ஏக்கா் 40 சென்ட் நிலம், சென்னை நுங்கம்பாக்கம் வீடு,மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுக்குமாடி குடியிருப்பு வீடு, குன்றத்தூரில் இருக்கும் 4 ஏக்கா் 41 சென்ட் நிலம்,பூந்தமல்லி பிடாரிதாங்கலில் உள்ள 3 ஏக்கா் 63 சென்ட் நிலம், கொளபஞ்சேரியில் இருக்கும் 1.48 ஏக்கா் நிலம்,தா்மபுரி மாவட்டம் பன்னிக்குளத்தில் உள்ள 7.09 ஏக்கா் நிலம்,சென்னை அருகே முட்டுக்காட்டில் இருக்கும் 83.20 சென்ட் நிலம், மயிலாப்பூா் கதீட்ரல் சாலையில் உள்ள 2290 சதுர அடியில் உள்ள நகைக் கடை,தேனாம்பேட்டை சேமியா்ஸ் சாலையில் உள்ள 4200 சதுர அடியில் நான்கு தளங்களுடன் கூடிய அலுவலகம், பெரம்பூரில் 7184 சதுர அடியில் உள்ள கட்டடம் ஆகியவற்றை அமலாக்கத்துறைறயினா் வியாழக்கிழமை முடக்கியுள்ளனா். இந்த 14 சொத்துகளின் மதிப்பின் ரூ.138 கோடி என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com