சிப்பெட்' டிப்ளமோ படிப்பு: மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) சார்பில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகளில் 2018-19-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) சார்பில் வழங்கப்படும் டிப்ளமோ படிப்புகளில் 2018-19-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து சிப்பெட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிப்பெட் சார்பில் நடத்தப்படும் மூன்றாண்டு டிப்ளமோ மற்றும் ஒன்றரை ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 1 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு குறித்த விவரங்கள் www.cipet.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூன் 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 96771 23882, 94446 99936 ஆகிய செல்லிடப்பேசிகளில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com