திருபுவனை அருகே அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்துப் பார்வையிடும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி. 
திருபுவனை அருகே அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்துப் பார்வையிடும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி. 

புதுவை அரசுப் பள்ளிகளில் விரைவில் சப்பாத்தி, இனிப்புகளுடன் மதிய உணவு: நாராயணசாமி தகவல்

புதுவை அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவை அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் சப்பாத்தி, தயிர் சாதம், இனிப்புகள் விரைவில் வழங்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியை அடுத்த திருபுவனை சன்னியாசிக்குப்பத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு தொண்டு நிறுவனம் சார்பில் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. 
இந்த வகுப்பறைக் கட்டடத்தை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை திறந்து வைத்துப் பேசியதாவது:
புதுவை அரசு கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதுச்சேரியை கல்விக் கேந்திரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு தரமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, மாணவர்கள் மீது ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புக் கூட்டத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுவையான உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழக்கமான உணவுக்கு மாற்றாக சப்பாத்தி, தயிர்சாதம் மற்றும் சுவையுடன் கூடிய உணவும், இனிப்பு வகைகளும் வழங்கப்படும். விரைவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும்.
பொலிவுறு வகுப்பறைத் திட்டம்: அரசுப் பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைத் திட்டம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 60 பள்ளிகளில் பொலிவுறு வகுப்பறைகள் தொடங்கப்படும். 20 காரைக்காலிலும், 40 புதுச்சேரியிலும் தொடங்கப்படும்.
இதற்கான முதல் கட்டப் பணி நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதைப் பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு, கல்வித் துறை அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முன்னதாக பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com