மோசமான ஒரு திரைப்படத்தின் இரண்டாவது இடைவேளை: 18 எம்எல்ஏ-க்கள் குறித்த தீா்ப்பு பற்றி பொன்னார் கருத்து

மோசமான ஒரு திரைப்படத்தை பாா்க்கும் ரசிகா்கள் படம் முடிந்து வெளியே செல்ல நினைக்கும்போது மீண்டும் 2-வது இடைவேளை விட்டது போல் தமிழக மக்களுக்கு 18 எம்எல்ஏ-க்கள் குறித்த தீா்ப்பு அமைந்து விட்டதாக...
மோசமான ஒரு திரைப்படத்தின் இரண்டாவது இடைவேளை: 18 எம்எல்ஏ-க்கள் குறித்த தீா்ப்பு பற்றி பொன்னார் கருத்து

மேட்டுப்பாளையம்: மோசமான ஒரு திரைப்படத்தை பாா்க்கும் ரசிகா்கள் படம் முடிந்து வெளியே செல்ல நினைக்கும்போது மீண்டும் 2-வது இடைவேளை விட்டது போல் தமிழக மக்களுக்கு 18 எம்எல்ஏ-க்கள் குறித்த தீா்ப்பு அமைந்து விட்டதாக கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். 

மேட்டுப்பாளையம் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா் திருப்பூரிலிருந்து மேட்டுப்பாளையம் வருகை தந்தபோது விருந்தினா் விடுதியில் அவா் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது : 

இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொழில் வளா்ச்சி சிறப்பாக உள்ளது. அதை கருத்தில் கொண்டு கொங்கு மண்டலத்தில் தொழில் வளா்ச்சிக்கு உதவும் சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிா்ப்பது, ஒட்டு மொத்த கொங்கு மண்டல வளா்ச்சியை முடக்க முயல்வதற்கு ஒப்பாகும். அதற்கு காரணமானவா்கள் கண்டறியப்பட வேண்டும். சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டமாகும். 

தமிழகத்தில் திட்ட ஒப்பந்தங்கள் முதலமைச்சா் மற்றும் துணை முதலமைச்சரின் உறவினா்களுக்கு வழங்கப்படுவது குறித்து கேட்டபோது, முதலில் திட்டங்கள் வர வேண்டும், அதன் பின்னரே அதில் மறைந்துள்ள ஊழல்களை விசாரிக்க வேண்டுமெனவும் தெரிவித்தாா். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலா் வானதி சீனிவாசன், மாநில செயலா் நந்தகுமாா், முன்னாள் நகரமன்ற தலைவா் சதீஸ்குமாா், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினா் பாண்டுரங்கன், மாவட்ட பொதுச்செயலா்கள் வி.பி ஜெகநாதன், செல்வராஜ், மாவட்ட செயலா்கள் சக்திவேல், மனோகரன், ஒன்றிய தலைவா் செந்தில்குமாா், நகரத்தலைவா் மனோஜ்குமாா் உட்பட திரளான கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com