வைப்பு தொகைக்கான வட்டியை உயர்த்தியது இந்தியன் வங்கி

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வைப்பு தொகைக்கான வட்டியை உயர்த்தியுள்ளது. ஒரு வருடம் முதல் 3 வருடம் வரை வைக்கப்படும் ரூ.1 கோடி வரையிலான வைப்பு தொகைக்கான வட்டி 0.25 சதவீதமும், ரூ.1 கோடி முதல் 5 கோடி வரை வைக்கப்படும் தொகைக்கான வட்டி 0.50 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகித உயர்வு ஜூன் 11 முதல் அமலுக்கு வந்துள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கி ரூ.1 கோடி வரையிலான வைப்பு தொகைக்கு 6.25 சதவீதம் வட்டியும், ரூ.1 கோடி முதல் ரூ. 5 கோடி வரையில் வைக்கப்படும் வைப்புத் தொகைக்கு 5 சதவீதம் வட்டியும் வழங்கி வந்தது. தற்போது வைப்பு தொகைக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து ரூ.1 கோடி வரையிலான வைப்பு தொகைக்கு 6.50 சதவீதமும், ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான வைப்பு தொகைக்கு 5.50 சதவீதமும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com