இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்
இன்று முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் நாடு தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில், ஒரு பிரிவினர் இப்போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சுங்கச் சாவடி கட்டண உயர்வு, காப்பீட்டுத் தொகை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். 
லாரி தொழிலை முடக்கும் வகையிலான பாதிப்புகளைக் களைய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக லாரி உரிமையாளர்கள் பங்கேற்பது குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் கூறும்போது, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வருவதன் மூலம் லிட்டருக்கு ரூ.20 வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார். 
அத்துடன் 3-ஆம் நபர் காப்பீட்டு தொகையை தொடர்ந்து உயர்த்தி வருவதை ரத்து செய்ய வேண்டும். அதிகரிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். இதை வலியுறுத்தியே லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.
ஒரு பிரிவு பங்கேற்பதில்லை என அறிவிப்பு: இந்நிலையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் உறுப்பினர் யுவராஜ் கூறியது:
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மேற்கொண்ட முடிவின் படி திங்கள்கிழமை தொடங்குவதாக சில சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை. 
தமிழகத்தில், மாவட்டம், வட்டவாரியாக செயல்படும், 134 சங்கங்களின் ஆதரவுடன், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்படுகிறது. இதில் தமிழகத்தில் இயங்கும் 4.20 லட்சம் லாரிகளில், 3.90 லட்சம் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நாங்கள் ஜூலை 20-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார் யுவராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com