தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படுகிறது: தலைமை நீதிபதி

தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படுகிறது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 பொது நல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் இன்று விசாரணைக்கு வந்தன. 

அப்போது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் ஜெயலலிதா நினைவிடம் அமையக்கூடாது என்பது தனிப்பட்ட கருத்து என்றும் இருப்பினும் தனிப்பட்ட கருத்து வேறாக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டே தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். 

இதையடுத்து வழக்கில் அடுத்த விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com