ஹைவேவிஸ் மலையில் 500 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 34 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்தனர்.
உத்தமபாளையம் பகுதி இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்தனர். அவர்கள், தனித் தனி வாகனங்களில் ஞாயிற்றுக்கிழமை ஹைவேவிஸ், மேகமலை பகுதிக்குச் சுற்றுலா சென்றனர். 
அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பினர். அடுக்கம்பாறை (3000 அடி உயரம்) பகுதியில் வந்தபோது, ஒரு சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து சுமார் 500 அடியில் இருந்த பாறையின் மீது மோதி நின்றது.
இதுகுறித்த தகவலின்பேரில், சின்னமனூர், உத்தமபாளையம் பகுதி அரசு மருத்துவமனைகளில் இருந்து சுமார் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. 
இந்த விபத்தில், உத்தமபாளையம் மீரான் மகன் முகமது அப்துல் (11), அஜ்மல்கான் மகன் ரியாஸ் அகமது (14), சாதிக் அகமது மனைவி மரியம் (38), மீரான் (40) உள்பட 34 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள், சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஹைவேவிஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com