கையில் குடை இருக்கிறதா? மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது தேவைப்படலாம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை சற்று இடைவெளி விட்டிருந்தது. அந்த இடைவெளிக்கு தற்போது வருகிறது ஒரு இடைவேளை.
கையில் குடை இருக்கிறதா? மாலை நேரத்தில் வீடு திரும்பும் போது தேவைப்படலாம்


சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை சற்று இடைவெளி விட்டிருந்தது. அந்த இடைவெளிக்கு தற்போது வருகிறது ஒரு இடைவேளை.

இன்று முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தினமும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். அதுவும் டமால் டுமீல் மழையாக இருக்குமாம்.

இது பற்றி அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, கடற்கரை காற்று நிலப்பரப்புக்கு வந்து சாதகமான சூழ்நிலை அமைந்தால், சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்படி பெய்யாவிட்டால் தரைக்காற்று நகரத்தை அடையும் போது நள்ளிரவில் மழை பெய்யும்.

சென்னையில் இன்று வெப்ப சலன மழை துவங்குகிறது
தென்மேற்குப் பருவ மழை மேற்குக் கடற்கரைப் பகுதியில் தீவிரமாக உள்ளது. ஆனால் இந்த பருவ மழை தமிழகத்தின் இரண்டு வெப்பப் பகுதிகளான வேலூர் பகுதி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை), புதுக்கோட்டை பகுதியை எந்த வகையிலும் பெரிய அளவில் தாக்கவில்லை. 

சென்னையில் மழை 
சென்னையில் இன்று மழை பெய்யும். (பெய்யாமல் போக வாய்ப்பில்லை) அப்படி தவறினால், நாளை நிச்சயம் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

வெப்பச்சலனத்தால் இன்று பெய்யும் மழையால் சென்னைவாசிகளுக்கு ஒரு நல்ல மழை அனுபவம் கிடைக்கும். வழக்கம் போலதான், சென்னை (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகள்) மழையைப் பெறும் போது, தமிழகத்தின் பிற பகுதிகள் மழையில்லாத அமைதி நிலைக்குத் திரும்பும்.

சென்னை மாநகரம் முழுவரும் பரவலாக இந்த மழை இருக்காது. எங்கெல்லாம் மழை பெய்கிறதோ அது ஒரு போனஸ்தான். நமக்கு ஜூன் மாதத்துக்கான வழக்கமான மழை அளவு ஏற்கனவே கிடைத்துவிட்டது. இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயராது, அணைகளின் நீர் மட்டமும் உயராது.

மதியம் அல்லது மாலை வேளையிலேயே ஃபேஸ்புக்கில் வந்து சென்னையில் இன்னும் மழை பெய்யவில்லை என்று யாரும் கூற வேண்டாம், மழை பெய்தால் நன்று. இல்லை என்றால் நாளை இரவு செம்ம மழை பெய்யும் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com