மின்வாரிய அலுவலகங்களில் எல்.இ.டி. விளக்குகள் மீண்டும் விற்பனை'

மின்வாரிய அலுவலகங்களில் குறைந்த விலை எல்.இ.டி. மின்விளக்குகளின் விற்பனை அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்தின் துணை பொது மேலாளர்

மின்வாரிய அலுவலகங்களில் குறைந்த விலை எல்.இ.டி. மின்விளக்குகளின் விற்பனை அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ரமேஷ் கூறினார்.
மத்திய அரசின் எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனம் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் எல்.இ.டி. மின்விளக்குகள், டியூப் லைட், மின் விசிறி உள்ளிட்ட சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இச்சாதனங்கள் அனைத்தும் மின்வாரிய கட்டண மையங்களுக்கு அருகில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் விலை குறைவாகவும், தரமாகவும் இருப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இம்மின்விளக்குகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 
இதுகுறித்து எனர்ஜி எஃபிஷியன்சி துணைப் பொது மேலாளர் ரமேஷ் கூறியது:
வெளிச்சந்தையைவிட குறைவான விலையில் எல்.இ.டி. மின்விளக்குகளை விற்பனை செய்து வருகிறோம். கிராம சுயராஜ் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் மானிய விலையில் எல்.இ.டி. மின் விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1,477 கிராமங்கள் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் எல்.இ.டி. மின்விளக்குகள் விற்பனையாகின. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 31 கோடி மின்விளக்குகள் விற்பனையாகின. இவை தற்போது கையிருப்பு இல்லாததால் ஒருவாரமாக விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இவற்றின் விற்பனை மீண்டும் தொடங்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com