காவிரி: நீதிமன்ற தீர்ப்பை திசைதிருப்ப கர்நாடக முதல்வர் முயற்சி

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக முதல்வர் குமாரசாமி திசைதிருப்ப முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
காவிரி: நீதிமன்ற தீர்ப்பை திசைதிருப்ப கர்நாடக முதல்வர் முயற்சி

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக முதல்வர் குமாரசாமி திசைதிருப்ப முயற்சிப்பது கண்டனத்துக்குரியது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுகவினர் இல்லத் திருமண விழா மற்றும் காதணி விழாக்களில் பங்கேற்று அவர் பேசியது:
திமுக தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது காவிரிப் பிரச்னைக்காக எத்தனையோ முறை குரல் கொடுத்து, போராடி, வாதாடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறார். அவர் ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் நட்புணர்வுடன் பேசி ஓரளவாவது தண்ணீரைப் பெற்றுத் தந்திருக்கிறார்.
ஆண்டுதோறும் ஜூன் 12 -ஆம் தேதி பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஜூன் 1 -ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
மற்ற மாநிலங்கள் தங்களது உறுப்பினர்களை அறிவித்த நிலையில், கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற குமாரசாமி, காவிரிப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் மூலம் முடிவு செய்ய வேண்டும்' என அண்மையில் கூறியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அந்த தீர்ப்பை திசைதிருப்பும் வகையில், குமாரசாமி இப்படி கூறியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவுகட்டும் வகையில் விரைவில் தேர்தல் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்தத் தேர்தலின் மூலம் தமிழகத்துக்கு நல்ல விடிவுகாலத்தை ஏற்படுத்தித் தருவதற்கும், மத்தியில் மதசார்பற்ற அரசு அமையவும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com