குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

குற்றாலம் பேரருவியில் தணிந்தது வெள்ளப்பெருக்கு: குளிக்க அனுமதி

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்க

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் வியாழக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை, பிறகு நீக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

குற்றாலத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டில் சீசன் களைகட்டியுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் சீசன் தொடங்கியதுடன், தொடங்கிய நாள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள்தோறும் சிறிது நேரமாவது சாரல்மழை பெய்துவருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், குளிக்க தடைவிதிக்கப்படுவதும், சீற்றம் தணிந்தபிறகு குளிக்க அனுமதிப்பதும் தொடர்ந்து வருகிறது. அனைத்து அருவிகளிலும் வரத்து குறையாமல் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணிகளும், வர்த்தகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வியாழக்கிழமை இரவு பெய்த சாரல்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பேரருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

நள்ளிரவில் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com