சேலம் பசுமை வழிச் சாலை: மாற்றுப் பாதை அமைக்க நிபுணர் குழு: ஸ்டாலின் வலியுறுத்தல்

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் பசுமை வழிச் சாலை: மாற்றுப் பாதை அமைக்க நிபுணர் குழு: ஸ்டாலின் வலியுறுத்தல்

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிக்க நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் மக்களைப் பற்றி அதிமுக அரசு சிறிதும் கவலைப்படாமல் காவல் துறையை துணைக்கு வைத்துக் கொண்டு நில அளவை செய்து விவசாய நிலங்களுக்குள் கல் ஊன்றிச் செல்வது ஆத்திரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றுவதற்கு அல்லது தற்போது பயன்பாட்டில் உள்ள சாலைகளில் ஒன்றை அகலப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிக்க உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி திமுக சார்பில் சனிக்கிழமை (ஜூன் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 
அதிமுக அரசு தொடர்ந்து இதே பாதையில் திட்டத்தைப் பிடிவாதமாக நிறைவேற்றவும், மக்களைத் துன்புறுத்தி, அவர்களின் விளை நிலங்களை அத்துமீறிப் பறிக்க முயலுமேயானால், இந்தத் திட்டம் தொடர்புடைய அனைத்து மாவட்டங்களிலும் அறவழியில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com