ராகுலுடன் கமல் சந்திப்பால் திமுக தனித்து விடப்படுகிறதா?: பதில் கூற மு.க.ஸ்டாலின் மறுப்பு

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தில்லியில் சந்தித்து பேசியதன் மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்து விடப்படுமா
ராகுலுடன் கமல் சந்திப்பால் திமுக தனித்து விடப்படுகிறதா?: பதில் கூற மு.க.ஸ்டாலின் மறுப்பு

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தில்லியில் சந்தித்து பேசியதன் மூலம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்து விடப்படுமா என்பது குறித்து பதில் கூற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கவில்லை. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை கமல்ஹாசன் சந்தித்துள்ளதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தனித்து விடப்படுமா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். உங்களுடைய யூகங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் நிறைய தீவிரவாத அமைப்புகள் பத்திரிகைத் துறையிலேயே ஊடுருவி இருப்பதாகக் கூறியிருப்பது பற்றி கேட்கிறீர்கள். இன்றைக்கு இதைச் சொல்லியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் நாளை என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். புழல் சிறையிலேயே ஒரு கைதி கொலை செய்யப்படுகிறார் என்றால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com