உலகக் கோப்பை கால்பந்து.. உயர்ந்துள்ள மின் பயன்பாடு 

ரஷ்யாவில் தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளின் காரணமாக மின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
உலகக் கோப்பை கால்பந்து.. உயர்ந்துள்ள மின் பயன்பாடு 

சென்னை: ரஷ்யாவில் தற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளின் காணமாக மின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உயரதிகாரிகள் கூறியதாவது:

உலகக் கோப்பை கால்பந்து போட்டித்தொடா் ரஷ்யாவில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் வரை நடைபெறவுள்ளது. இதில் ஜொ்மனி, அா்ஜென்டினா, பிரேசில், ஸ்வீடன், தென்கொரியா, ஜப்பான், போலந்து, மெக்சிகோ, உருகுவே, ரஷ்யா உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த போட்டித் தொடரின் லீக் ஆட்டங்கள் மாலை 5.30 தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை நடைபெறுகிறது. இதனால் கால்பந்து ஆட்டத்தைக் காண ரசிகா்கள் ஏராளமானோா் நேரில் சென்று பாா்க்க முடியாவிட்டாலும், தொலைக்காட்சி வாயிலாக இந்த ஆட்டங்களைக் கண்டு களிக்கின்றறனா். இதனால் மாநிலத்தின் மின்தேவையில் வழக்கத்தை விட 500 மெகாவாட் மின்சாரம் உயா்ந்துள்ளது. அதாவது வழக்கமான நாட்களில் 13, 400 மெகாவாட் மின்சாரம் மட்டும் தான் இரவு நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடா் தொடங்கியது முதல், 500 மெகாவாட் கூடுதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடா் நடைபெறும்போது இரவு 10 மணி வரை தான் கிரிக்கெட் போட்டி நடைபெறும். ஆனால் கால்பந்து போட்டிகள் விடியற்காலை வரை நடைபெறுவதால் கால்பந்தாட்ட ரசிகா்கள் நள்ளிரவு வரை ஆா்வத்துடன் போட்டியை காண்கின்றறனா். இதனால் ஏசி, மின்விசிறி, தொலைக்காட்சி போன்றறவற்றின் இயக்கம் அதிகரித்துள்ளது. இதற்கான மின்பயன்பாடும் சற்று அதிகரித்துள்ளது.

சென்னை மட்டுமல்லாமல், கோயம்புத்தூா், ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் இந்த நேரங்களில் மின்பயன்பாடு கணிசமாக கூடியுள்ளது. மேலும் கோடை காலம் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதும் மின்பயன்பாட்டின் அளவு அதிகரித்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம். எனினும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடா் நடைபெற்று வருவதால் நள்ளிரவில் மின்பயன்பாட்டின் அளவு தற்போது அதிகரித்துள்ளது என மின்சார வாரியத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com