பொதுமக்கள் நலனுக்காக ஆய்வுகள் தொடரும்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு 

பொதுமக்கள் நலனுக்காக மாவட்ட ரீதியான ஆய்வுகள் தொடரும் என்று தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பொதுமக்கள் நலனுக்காக ஆய்வுகள் தொடரும்: ஆளுநர் மாளிகை அறிவிப்பு 

சென்னை: பொதுமக்கள் நலனுக்காக மாவட்ட ரீதியான ஆய்வுகள் தொடரும் என்று தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்து அங்கு அரசு அதிகாரிகளுடன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரது இந்தப் பயணத்திற்கு திமுக தெடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக் கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் நலனுக்காக மாவட்ட ரீதியான ஆய்வுகள் தொடரும் என்று தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் சென்று பார்வையிட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

ஆளுநர் தனது பயணத்தில் தமிழக அரசின் எந்தத் துறை குறித்தும் விமர்சிக்கவில்லை.

எனவே பொதுமக்கள் நலனுக்காக மாவட்ட ரீதியான ஆய்வுகள் தொடரும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com