ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: மு.க.ஸ்டாலின் உள்பட 1,111 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது கிண்டி போலீஸார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: மு.க.ஸ்டாலின் உள்பட 1,111 பேர் மீது வழக்குப் பதிவு

தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது கிண்டி போலீஸார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்யச் சென்றார். அப்போது ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து, திமுகவினர் ஆளுநர் செல்லும் பாதையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியதாக திமுகவை சேர்ந்த 290 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 இதைக் கண்டித்து, சென்னையில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமை திரண்டு ஆளுநர் மாளிகையை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். போலீஸார் ஆளுநர் மாளிகைக்கு முன்பே இவர்களைத் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், போலீஸாரின் தடையை மீறி ஆளுநர் மாளிகை நோக்கி திமுகவினர் சென்றனர். இதையடுத்து, ஸ்டாலின் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 இந்நிலையில், தடையை மீறி ஒன்று கூடுதல் (143), அரசு அதிகாரி உத்தரவை அவமதித்தல் (188) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com