ஏடிஎம் பண மோசடி: மேலும் 3 பேர் கைது; ரூ.1 கோடி மதிப்பு பொருள்கள் பறிமுதல்

ஏடிஎம் பண மோசடி வழக்கில் மேலும் 3 பேரை புதுவை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசுக் கார்கள், மடிக்கணினிகள் உள்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பு பொருள்கள்

ஏடிஎம் பண மோசடி வழக்கில் மேலும் 3 பேரை புதுவை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசுக் கார்கள், மடிக்கணினிகள் உள்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 புதுவையில் ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை ஸ்கிம்மர் கருவி மூலம் கண்டுபிடித்து, போலி ஏடிஎம் அட்டை தயாரித்து வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்குத் தொடர்பாக, என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சத்யா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய எதிரியான அரசியல் பிரமுகர் சந்துருஜியை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் 3 மாதங்களுக்கு மேலாக கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 இந்த நிலையில், ஏடிஎம் பண மோசடி சம்பவத்தில் சந்துருஜிக்கு வலதுகரமாக கோவையைச் சேர்ந்த பீட்டர் என்பவர் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கோவைக்கு சனிக்கிழமை சென்ற புதுவை சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் தொடர்புடைய பீட்டர், தினேஷ்குமார், இர்பான்ரகுமான் ஆகியோரைப் பிடித்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
 அதில், சந்துருஜியுடன் அவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 2 சொகுசுக் கார்கள், 5 மடிக்கணினிகள், ஏடிஎம் அட்டைகள், வங்கிப் புத்தகங்கள் உள்பட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 சந்துருஜியிடம் ஸ்வைப்பிங் இயந்திரத்தை வாங்கி, அதன் மூலம் வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்ததாக, பீட்டர் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இவர்கள் மூவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com