சட்டப்பேரவை இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கூடுகிறது.
சட்டப்பேரவை இன்று கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை 10 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் கூடுகிறது.
 பேரவையில் இன்று...செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றுகின்றனர். விவாதங்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
 நாளை முதல்வரின் துறை: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் மானியக் கோரிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் காவல் துறை மானியக் கோரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த விவாதங்களுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
 முக்கிய பிரச்னைகள்: சட்டப் பேரவை கூட்டத் தொடர் பத்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் கூடவுள்ள நிலையில், பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் நாமக்கல்லில் திமுகவினர் கைது, எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்துவது, ஸ்டெர்லைட் விவகாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.
 இரண்டு கட்டங்களாக...தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை பேரைவக் கூட்டத் தொடர் நடைபெற்றது. வனம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி, உள்ளாட்சித் துறை, தொழில் துறை, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி என சில பிரதான துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 இறுதியாக கடந்த 14-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று இரண்டாம் கட்டமாக நிகழ்வுகள் தொடர ஜூன் 25-ஆம் தேதிக்கு பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com