தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரி 47 போராட்டங்கள்: முதல்வர் பழனிசாமி தகவல்

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 47 போராட்டங்கள் நடைபெறுவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் புதன்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயங்களுக்காக போராட்டங்கள் நடத்துவதாக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது, 

"2017-ஆம் ஆண்டில் மட்டும் 31,269 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் மற்றவர்கள் நடத்தும் போராட்டங்கள் அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவே நடத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், மதம் சார்ந்த அமைப்புகள் மற்றும் பலரால் போராட்டம் நடைபெறுகிறது. ஒரு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழகத்தை போராட்ட களமாக மாற்ற முயற்சிக்கின்றனர். 

இதுபோன்ற போராட்டத்தின் உண்மையான நோக்கம் பொது நலனுக்காக அல்ல, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தான். இந்தியாவில் அரங்கேறும் போராட்டங்களில் 15 சதவீத போராட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே அரங்கேறியுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 47 போராட்டங்கள் நடைபெறுகிறது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com