தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீன் ரத்து கிடையாது: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி   

தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..
தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீன் ரத்து கிடையாது: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி   

மதுரை:  தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் பலா் மீது வழக்குப்பதிவு செய்தனா். இதில் 65 பேரை கைது செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா், அவா்களை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் சாருஹாசினி முன்பு ஆஜா்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் 65 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், வழக்கை முறையாக விசாரிக்காமல் 65 பேரையும் விடுவித்து தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டுள்ளாா். எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது 65 பேரிடமும் மாவட்ட நீதித்துறைற நடுவா் பெற்றற வாக்குமூலத்தை சமா்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அதன்படி இந்த வழக்கானது புதன்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சரியான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்த நீதிபதி, ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com