சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம்: பதிலளிக்க உத்தரவு 

சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டம்: பதிலளிக்க உத்தரவு 

சென்னை: சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மaத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் பூவுலகின் நண்பா்கள் அமைப்பைச் சோ்ந்த சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனுவில், சென்னை சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த திட்டம் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி செயல்படுத்தப்பட உள்ளது. அந்த சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாள்களுக்குள் பாதிக்கப்படும் மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். ஆனால் தற்போது மக்களிடம் எந்தவிதமான கருத்துக்களையும் கேட்கவில்லை. நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக நிலஆா்ஜித சட்டம் 1984 ஐ மாற்றி மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு நியாயமான இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமா்வு மற்றும் வெளிப்படையான நில ஆா்ஜித சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் உரிய ஆலோசனை நடத்தவும், நிலம் கையகப்படுத்துதல் குறித்து கேள்வி எழுப்புவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இந்த சட்டத்தில் உள்ள சட்டப்பிரிவு 105 நியாயமான இழப்பீடு கோரும் உரிமைக்கு எதிரானது. எனவே அந்த சட்டப்பிரவு 105 ரத்து செய்வதுடன், சென்னை சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் என்.சேஷசாயி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமைக்கு தடை விதிக்கும் வகையில் உள்ள சட்டப்பிரிவு 105 ஐ ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை நிலத்தின் மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை அரசு உயா்த்தி வழங்க இருப்பதாக தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய மாநில அரசுகள் வரும் ஜூலை 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறறப்பித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com