தமிழகத்தில் வெற்றிடம் இல்லை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழக மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் வெற்றிடம் இல்லை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழக மக்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, சென்னை சட்டக் கல்லூரியை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறும், அந்தக் கோரிக்கையை அரசிடம் வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்து கூறியதாவது:
தமிழகத்தில் தலைவனுக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பவே அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவ்வாறு தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை தமிழக மக்களும் ஒப்புகொள்ள மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும், அடுத்த ஆட்சியாக திமுக ஆட்சிதான் அமையப்போகிறது. மக்கள் அதற்கு தயாராக இருக்கிறார்கள்.
மமதா பேசினார்: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அண்மையில் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு புதிய கூட்டணி அமைப்பது குறித்துப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் ஓர் ஆண்டுக் காலம் இருக்கிறது, அப்போது எங்களுடைய உயர்நிலைக் குழுவுடன் விவாதித்து, பதில் சொல்வதாக அவரிடம் தெரிவித்திருக்கிறேன். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவர் இந்த வேண்டுகோள் வைத்திருக்கிறார். 
சட்டப் பேரவையைக் கூட்டுவது தள்ளிவைப்பு: ''காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 8-ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டுவதாக உங்களிடத்தில் (ஸ்டாலின்) சொல்லியிருந்தோம். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பேசுவதற்காக நான்கு மாநில அதிகாரிகளை தில்லிக்கு வரும் 9- ஆம் தேதி மத்திய அரசு அழைத்திருக்கிறது. எனவே, அந்தக் கூட்டம் முடிந்த பிறகு, அதைப் பார்த்துவிட்டு சட்டப்பேரவையைக் கூட்டலாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த திங்கள்கிழமை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார். அதை ஏற்றுக்கொண்டேன்.
அனைத்து கட்சித் தலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்று திமுக சார்பில் தொடர்ந்து பிரதமரை வலியுறுத்தி வருகிறோம். கர்நாடகத்தில் விரைவில் தேர்தல் வரப் போகிறது. எனவே, அந்தத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, தமிழக மக்கள் நிலை பற்றி பிரதமர் கவலைப்படாமல் இருக்கிறார் என்றார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com