மார்ச் 28-இல் சென்னை-திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் மார்ச் 28-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் மார்ச் 28-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. ரயில் பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை-திருநெல்வேலி, கொச்சுவேலி-மங்களூர் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை-திருநெல்வேலி: சென்னை எழும்பூர்-திருநெல்வேலிக்கு மார்ச் 28-ஆம் தேதி இரவு 9.50 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82613) புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூருக்கு மார்ச் 31-ஆம் தேதி முற்பகல் 3.30 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் (82614) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டு ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும்.
கொச்சுவேலி-மங்களூர் சந்திப்பு: கொச்சுவேலியில் இருந்து மங்களூர் சந்திப்புக்கு மார்ச் 23, 30 ஆகிய தேதிகளில் மாலை 6.35 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06053) புறப்பட்டு, மறுநாள் காலை 5.10 மணிக்கு மங்களூர் சந்திப்பை சென்றடையும். அதேபோல், மங்களூர் சந்திப்பில் இருந்து கொச்சுவேலிக்கு மார்ச் 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் முற்பகல் 3.40 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06054) புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (மார்ச் 7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com