உலக மகளிர் தினம்: பெண்களால் இயக்கப்பட்ட விமானம் கோவை வருகை

உலக மகளிர் தினத்தையொட்டி ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் பைலட், விமானப் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த விமானம் தில்லியில் இருந்து சென்னை வழியாக கோவை
தில்லியிலிருந்து கோவை விமான நிலையத்துக்குப் பெண் பணியாளர்களுடன் விமானத்தை ஓட்டி வந்து, உலக மகளிர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய பெண் ஓட்டுநர்கள் (பைலட்).
தில்லியிலிருந்து கோவை விமான நிலையத்துக்குப் பெண் பணியாளர்களுடன் விமானத்தை ஓட்டி வந்து, உலக மகளிர் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடிய பெண் ஓட்டுநர்கள் (பைலட்).

உலக மகளிர் தினத்தையொட்டி ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் பைலட், விமானப் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்கள் மட்டுமே இடம்பெற்றிருந்த விமானம் தில்லியில் இருந்து சென்னை வழியாக கோவை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்து சென்றது.
ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த கேப்டன் ரம்யா ரங்கராஜ் தலைமையில், பிளைட் ஆபீஸர் பிருந்தா நாயர், விமானப் பணிப் பெண்களான ரஜினி, ஷைஜா, வர்ஷா, பிரியங்கா, ரேஷ்மி ஆகியோரைக் கொண்ட பெண்கள் குழுவினர் தில்லியில் இருந்து சென்னை வந்தனர்.
பின்னர், சென்னையில் இருந்து 127 பயணிகளுடன் அவர்கள் இயக்கிய விமானம், கோவை விமான நிலையம் வந்தடைந்தது. கோவை விமான நிலையம் வந்தடைந்த பெண்கள் குழுவினரை விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், ஏர் இந்தியா நிறுவன மேலாளர் கிரிஜா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலைய வளாகத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
இதுகுறித்து, விமான பைலட் ரம்யா ரங்கராஜ் கூறியதாவது: 
முழுக்க பெண்களால் மட்டுமே இந்த விமானம் இயக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏர் இந்தியா நிறுவனம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும். அவர்களுக்கு ஆண்கள் ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, 170 பயணிகளுடன் விமானம் சென்னை சென்று அங்கிருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. உலக மகளிர் தினத்தையொட்டி, கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தானியங்கி நாப்கின் இயந்திரத்தை ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஹரி தொடக்கிவைத்தார். மேலும், யோகா பாட்டி நானம்மாள் கௌரவிக்கப்பட்டார். 
மேலும், இண்டிகோ தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்த பெண்கள் விமான நிலையத்தில் நடனமாடி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com