கர்ப்பிணி சாவு: தமிழக அரசு, டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில், மோட்டார்சைக்கிளில் இருந்து கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை

திருச்சி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில், மோட்டார்சைக்கிளில் இருந்து கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது: 
கர்ப்பிணி உயிரிழந்தது தாடர்பாக ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது போலீஸாரின் மிருகத் தன்மையின் மோசமான உதாரணமாக இருக்கும். இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
மேலும், தவறிழைத்த காவல் ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிவாரணம், அவரது கணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவை தொடர்பான விவரங்களும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும். 
குடிமக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், பணியில் இருக்கும் போது விவேகமான முறையில் நடந்து கொள்ளவும் மாநிலப் போலீஸாருக்கு தகுந்த உத்தரவுகளை தமிழக காவல் துறைத் தலைவர் பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது. என்று நோட்டீஸில் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com