'சுபிக்ஷா' சுப்பிரமணியன் ஜாமீன் கோரி மனு

வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'சுபிக்ஷா' சுப்பிரமணியன் ஜாமீன் கோரி சென்னை 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'சுபிக்ஷா' சுப்பிரமணியன் ஜாமீன் கோரி சென்னை 6-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுப்பிரமணியன். தமிழகம் முழுவதும் 'சுபிக்ஷா' என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட், நிதி நிறுவனங்களை நடந்தி வந்தார். 
இந்த நிதி நிறுவனங்களின் மூலம் பொதுமக்களின் முதலீட்டுத் தொகையைப் பெற்று ரூ.150 கோடி வரை மோசடி செய்ததாக சுப்பிரமணியன் மீது சென்னை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுப்பிரமணியன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சுப்பிரமணியன் சூப்பர் மார்க்கெட் தொடங்குவதற்காக 13 வங்கிகளில் ரூ.700 கோடி வரை கடனாகப் பெற்றார். அந்த தொகையின் மூலம் பல முக்கிய இடங்களில் சொத்துக்கள் வாங்கியது அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிந்து, சுப்பிரமணியனை கைது செய்தனர்.
இந்த நிலையில் சுப்பிரமணியன் ஜாமீன் கோரி சென்னை 6 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தனசேகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com