சைவ சித்தாந்தக் கருத்துகளை உலகெங்கும் பரப்ப வேண்டும்: ஆளுநர் வலியுறுத்தல்

சைவ சித்தாந்தக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால்
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 5-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்தரங்க மலருடன் (இடமிருந்து) டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி செயலர் அசோக் முந்த்ரா, 
சென்னையில் வியாழக்கிழமை தொடங்கிய 5-ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்தரங்க மலருடன் (இடமிருந்து) டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி செயலர் அசோக் முந்த்ரா, 

சைவ சித்தாந்தக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம், அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், சென்னை பல்கலைக் கழக சைவ சித்தாந்தத் துறை, அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி தமிழ்த் துறை ஆகியவற்றின் சார்பில், ஐந்தாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது. வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசியது:
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், திருமுறைகள், சித்தாந்த சாத்திரங்கள் அடங்கியது சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தக் கொள்கைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் பின்பற்றி வருகின்றனர். தொடர்ந்து உலகெங்கும் சைவ சித்தாந்த கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் ஆளுநர்.
தருமை ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மென்மையான பெண்களை வலிமையான ஆண்கள் பாதுகாத்துப் போற்ற வேண்டும் என்றார்.
மலர்: மாநாட்டு கருத்தரங்க மலரை கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயில் தலைவர் டத்தோ ஆர்.நடராஜா வெளியிட, வைஷ்ணவக் கல்லூரிச் செயலாளர் அசோக்குமார் முந்த்ரா பெற்றுக் கொண்டார். 
தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன கௌரவ இயக்குநர் டி.என்.ராமச்சந்திரன், தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, மலேசிய தொழிலதிபர் ஜி.கலைச்செல்வன், லண்டனைச் சேர்ந்த மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நடராஜா சச்சிதானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
வரும் 11-ஆம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகûளை சென்னை பல்கலைக் கழக சைவ சித்தாந்தத் துறை பேராசிரியர் நல்லூர் சரவணன், வைஷ்ணவக் கல்லூரி முதல்வர் கு.சுதாகர், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
சென்னைப் பல்கலை.யில் சைவ சித்தாந்த சிறப்புப் படிப்பு
மாநாட்டில் சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் பி.துரைசாமி பேசியது: சைவ சித்தாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில் இந்தக் கல்வி ஆண்டு முதல் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., சைவ சித்தாந்தம் என்ற புதிய பாடம் சிறப்பு பாடப் பிரிவாக தொடங்கப்படுகிறது. ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்க்கப்பட உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 20 அல்லது 30 தொடர் வகுப்புகள் நடத்தப்படும். மீதம் உள்ள நாள்களில் வீடுகளில் இருந்தே படித்து பட்டம் பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com