வஞ்சத்திற்காகத் தூக்கப்பட்ட கத்தி: அநியாயமாகப் பிரிந்த மாணவி அஸ்வினியின் உயிர்! 

காவல்துறையில் தன்மீது ஏற்கனவே புகார் கொடுத்ததற்கு வஞ்சம் தீர்ப்பதற்காகவே சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி வாலிபர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள தகவல்.. 
வஞ்சத்திற்காகத் தூக்கப்பட்ட கத்தி: அநியாயமாகப் பிரிந்த மாணவி அஸ்வினியின் உயிர்! 

சென்னை: காவல்துறையில் தன்மீது ஏற்கனவே புகார் கொடுத்ததற்கு வஞ்சம் தீர்ப்பதற்காகவே சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி வாலிபர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

சென்னை கே.கே.நகரில் மீனாட்சி மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அஸ்வினி என்ற பெண் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இன்று கல்லூரியில் வகுப்புகள் முடிந்து கல்லூரி வாசலில் அஸ்வினி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அஸ்வினியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதன் காரணமாக அஸ்வினி மயங்கிச் சரிந்தார்.

அவரை உடனடியாக கூடியிருந்தவர்கள் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதே சமயம் அவரைக் கத்தியால் குத்திய வாலிபரை அங்கு இருந்தவர்கள் பிடித்து அடித்து உதைத்து கே.கே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்தது. பொதுமக்கள் தாக்கியதால் காயம் பட்ட அவரும் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேசமயம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்வினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் தற்பொழுது ராயப்பேட்டை அரசு மருத்துவமைக்குஎடுத்துச் செல்லபட உள்ளது. தற்பொழுது அஸ்வினியின் தோழிகள் மற்றும் கல்லூரியில் விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் காவல்துறையில் தன்மீது ஏற்கனவே புகார் கொடுத்ததற்கு வஞ்சம் தீர்ப்பதற்காகவே சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி அஸ்வினி வாலிபர் ஒருவரால்  குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

அஸ்வினியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் மதுரவாயலைச் சேர்ந்த அழகேசன் (28) என்பது தெரிய வந்துள்ளது. அவர் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார் என்று தெரிய வருகிறது. அத்துடன் மதுரவாயலில் குடிதண்ணீர் கேன்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாணவி அஸ்வினியும் மதுரவாயலைச் சேர்ந்தவர். முன்பே அழகேசன் மாணவி அஸ்வினிக்கு காதல் செய்வதாக தொல்லை கொடுத்துளார். அத்துடன் ஒருமுறை கட்டாயமாக அஸ்வினிக்கு தாலி கட்டுவதற்கு முயன்றார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

எனவே அழகேசன் மீது மதுரவயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்துள்ளார்.  அதன் அடிப்படையில் அழகேசன் ஏற்கனவே மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடனே அழகேசன் தொல்லையிலிருந்து தப்பிக்க மாணவி அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இதனிடையே குறிப்பிட்ட வழக்கில் அழகேசன் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். அப்படி வந்தவர் காவல்துறையில் புகார் கொடுத்து தன்னைச் சிறையில் அடைத்த அஸ்வினி மீது பழி தீர்ப்பதற்கு இத்தகைய கொடூர செயலைச் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com