விலை வீழ்ச்சியால் நாற்று உற்பத்தி  செய்வோரிடம் தக்காளி விற்கும் விவசாயிகள்

தம்மம்பட்டி பகுதிகளில் தக்காளிவிலை வீழ்ச்சியடைந்ததையடுத்து தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் காய்த்து,பழுத்துள்ள தக்காளி பழங்களை விதையாக்கி நாற்று நடுவதற்காக
விலை வீழ்ச்சியால் நாற்று உற்பத்தி  செய்வோரிடம் தக்காளி விற்கும் விவசாயிகள்

தம்மம்பட்டி பகுதிகளில் தக்காளிவிலை வீழ்ச்சியடைந்ததையடுத்து தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் காய்த்து,பழுத்துள்ள தக்காளி பழங்களை விதையாக்கி நாற்று நடுவதற்காக விற்பனை செய்யத்துவங்கியுள்ளனர்.

தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில்  நூற்றுக்கணக்கான ஏக்கர்களில்  விவசாயிகள் தக்காளி பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனால் தினந்தோறும்  தம்மம்பட்டியிலுள்ள  தக்காளி மண்டிகளுக்கு அதிகளவில் தக்காளிப்பழங்கள் வருகின்றன. கடந்த சில வாரங்களாக தம்மம்பட்டி பகுதியில் தக்காளி கடும் விலை வீழ்ச்சியடைந்து வருகின்றது.

கெங்கவல்லி வட்டத்தில் தம்மம்பட்டியில் 3 மண்டிகள் இருப்பதால், மண்டிகளிடையே போட்டி போட்டு, தக்காளி பழங்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து  தம்மம்பட்டி விவசாயிகள் கூறியது, தலைவாசலில் 28 கிலோ தக்காளி ரூ.200க்கும், திருச்சியில்  ரூ.160க்கும் விலை போகின்றது. தம்மம்பட்டியில் மட்டும்தான் விலை குறைவாக   ரூ.130க்கு விலை போகின்றது. மற்ற ஊர்களைவிட   இங்கு மிகவும் விலை குறைவாகத்தான் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

தம்மம்பட்டி பகுதிகளில் விலை குறைவாக தக்காளி விற்பனையாவதால், தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர், தற்போது அதனை , விதைக்காகவும் நாற்று நடுவதற்காகவும் மொத்தமாக விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.

தம்மம்பட்டியில்  அரை ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயி மணி என்பவர் கூறும்போது, தக்காளி பயிரிட நாற்று ரூ.1800க்கு வாங்கி பயிரிட்டோம். களை வெட்டுதல், உரமிடுதல் என பராமரிப்பு செலவு அதிகமாகிறது. மேலும் 100 கிலோ தக்காளிப்பழங்களை பறித்துத்தர ரூ.100 கூலியாக ஒருவருக்கு தர வேண்டும். பறித்துத்தர ஆகும் கூலிகூட இப்போது ,விற்றால் கிடைப்பதில்லை. அதனால் வயல்களிலேயே தக்காளி பழங்களை பறிக்காமல்  விட்டுவிடும் சூழல் உள்ளது. 

தக்காளி நாற்றை விற்பனை செய்வோர், எங்களிடம் வந்து ஒட்டு மொத்தமாக வாங்கிச்செல்கின்றனர். மண்டிகளில் விற்கப்படும் குறைந்தஅளவு விலையைவிட, நாற்றுக்காக வாங்குவோர்  சற்று அதிக விலை கொடுத்து வாங்கிச்செல்வதால், அவர்களிடம் இதுவரை 500 கிலோவிற்கு மேல் கொடுத்துவிட்டோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com