ஸ்ரீபெரும்புதூர் அருகே வான்வழி பூங்கா அமைக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் 250 ஏக்கரில் வான்வழி பூங்கா நிறுவப்பட உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வான்வழி பூங்கா அமைக்கப்படும்: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகில் 250 ஏக்கரில் வான்வழி பூங்கா நிறுவப்பட உள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், சர்வதேச பொறியியல் வள ஆதார கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசியது: 
தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான அனுமதிகளை எளிதாக பெறுவதற்கான வசதிகளை அரசு செய்துள்ளது. மாநில, மாவட்ட அளவில் ஒற்றைச்சாளர குழுக்களை அமைக்க சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள், ஜவுளிகள், கைவினைப் பொருள்கள், தோல் பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் ஏற்றுமதியில் தேசிய அளவில் தமிழகம் முக்கிய பங்காற்றுகிறது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இருந்து மிகப்பெரிய அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆட்டோ மொபைல் உற்பத்தித் திறன் 3.55 மில்லியன் அலகுகளாக உள்ளன. இது 2020 -இல் 5.8 மில்லியன் அலகுகளாக அதிகரிக்கும். இந்திய ஆட்டோ உதிரிபாகங்கள் பங்களிப்பில் தமிழகம் 28 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
வான்வழி பூங்கா: வான்வழி பூங்கா நிறுவுதல், பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்புகளை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகில் 250 ஏக்கரில் வான்வழி பூங்கா நிறுவப்படவுள்ளது. 
பாதுகாப்பு தளவாட உற்பத்தி காரிடர் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொறியியல் துறையில் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். கனரக பொறியியல் மேம்பாட்டுக்கான முதலீட்டுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் மண்டலத்தில் முதலீட்டை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
தொழில்துறை அமைச்சர் சம்பத், ஊரக தொழில் துறை அமைச்சர் பி.பெஞ்ஜமின், செக் குடியரசு அமைச்சர் தாமஸ் குன்னர், இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ரவி ஷேகல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com