ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறினார்.
உடுமலை சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் தொடக்கவிழா, உடுமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 
பள்ளி, கல்லூரிகளில் மத்திய அரசு சம்ஸ்கிருதத்தை திணிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாகும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த மாநில அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமை க்கும் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு மீண்டும் கூட்ட வேண்டும். குரங்கணி மலையேற்றப் பயிற்சிக்கு வனத் துறையும், காவல் துறையும் அனுமதி வழங்கியிருக்கக் கூடாது என்றார். 
இப்பேட்டியின்போது மாவட்டத் தலைவர் ரவி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com