இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார்?: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார்?: தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக சார்பில் திருப்பூரில் தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வு 'தமிழ்த் தாமரை யாத்திரை' எனும் பெயரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: 
மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் திட்டங்கள் குறித்து, மாநில முதல்வர், மத்திய அமைச்சர்களைச் சந்தித்து, திட்டங்களை நிறைவேற்றத் தேவைகள் குறித்து கோரிக்கை விடுக்கும் ஆக்கப்பூர்வ அரசியலை பாஜக மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் பல புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சியும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. புதியவர்கள் வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய சூழ்நிலை அரசியலில் இல்லை. சிறையில் இருப்பவர்களின் படத்தை போட்டுக் கொண்டு, தமிழகத்தை தலைநிமிர வைப்போம் என்கிறார் தினகரன். மாநிலப் பிரச்னை குறித்து ரஜினி கருத்து சொல்லவில்லை என கமல்ஹாசன் சொல்கிறார். ஆனால் இதற்கு முன், பல பிரச்னைகளில் கமலும் கருத்து சொல்லாமல்தான் இருந்தார்.
கமல்ஹாசனின் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதில், எனது மின்னஞ்சலுக்கு மக்கள் நீதி மய்யத்தில் நான் உறுப்பினர் ஆகியுள்ளதாக மின்னஞ்சல் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. கமல் போலித்தனமாக கட்சி நடத்துகிறார் என்பதற்கு இதுவே சான்று. 
நடிகர் ரஜினியைப் பொருத்த வரை அன்றாட அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று விமர்சனம் செய்யும் அளவுக்கு நடந்து கொள்ளும்போது விமர்சிப்போம். நாங்கள் ரஜினி, கமல் என்று பாகுபாடு பார்க்கவில்லை. ஆன்மிக அரசியலை நாங்களே தெளிவாக முன்னெடுத்துச் செல்கிறோம்.
இலங்கையில் 2009-இல் நடைபெற்றது போர்க் குற்றம் என்று அறிவித்து, அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 
அன்றைய சூழலில், இந்தியாவை ஆண்ட மத்திய காங்கிரஸ் அரசின் துணையோடு போர் புரிந்ததாக அன்றைய ராணுவ மந்திரி கோத்தபய ராஜபட்ச கூறி இருந்தார். காங்கிரஸ் அரசால் நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் எங்கிருந்தார்? ராஜீவ் கொலையாளிகளை மன்னிப்பதாக இன்று ராகுல் சொல்வது வெறும் அரசியல். 
காவிரி நதிநீர் ஆணையத்தை அமைப்பதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நீதிமன்றம் குறிப்பிட்டபடி 6 வாரங்களுக்குள் காவிரி நதிநீர் ஆணையம் உறுதியாக அமைக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com