கமுதியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அய்யாக்கண்ணு துண்டுப்பிரசுரம் விநியோகம்

கமுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  செவ்வாய்க்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தார்.
கமுதியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அய்யாக்கண்ணு துண்டுப்பிரசுரம் விநியோகம்

கமுதியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து  செவ்வாய்க்கிழமை துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்தார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குமரி முதல் கோட்டை வரை விவசாயிகள் விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன், கமுதி பேருந்து நிலையம், கமுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் சக்கரை விலையை உயர்த்திய மத்திய, மாநில அரசு கரும்பு விலையை உயர்த்த மறுக்கிறது. ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் செலவு செய்யும் வாழை விவசாயிகளுக்கு வாழை அழிந்தால்,  ஒரு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது. 

இதனை உயர்த்தி வழங்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்கள் மின் இணைப்பு கேட்டால் உடனே வழங்கும் அரசு, விவசாயிகளுக்கு 18 ஆண்டுகளாக மின் இணைப்பு கொடுக்க மறுக்கிறது.  

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி வரும் 29 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தில்லியில் விவசாயிகள் சார்பில் தூக்குப் போடும் போராட்டம் நடத்தப்படும். கடும் வறட்சி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக கமுதி பகுதிகளில் குறுகிய காலத்தில் ஏராளமான சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

தற்போது கமுதி பகுதியில் 600 அடிக்கு மேல் நிலத்தடி நீர் சென்று விட்டது. இந்நிலையில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்கள், சூரியஒளி தகடுகளை கழுவ குடிநீரை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் குறையும். 

எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்த பிறகு சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com