கொல்லிமலையில் மே 31 வரை மலையேற்றப் பயிற்சிக்கு தடை

கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு மே 31-ஆம் தேதி வரை வனத் துறை தடைவிதித்துள்ளது.
கொல்லிமலையில் மே 31 வரை மலையேற்றப் பயிற்சிக்கு தடை

கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு மே 31-ஆம் தேதி வரை வனத் துறை தடைவிதித்துள்ளது.
தேனி மாவட்டத்துக்குள்பட்ட குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி, 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட கொல்லிமலை வனப் பகுதிக்குள் மலையேற்றப் பயிற்சிக்கு மே 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ரா.காஞ்சனா கூறியதாவது:-
குரங்கணியில் 11 பேர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை கருத்தில் கொண்டும், கோடைக்காலம் துவங்க உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதாலும், வனப்பகுதியில் உள்ள மரங்கள், புல்வெளிகள் எளிதில் தீப்பற்ற கூடிய நிலையில் உள்ளதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி கொல்லிமலை வனப்பகுதிகளில் மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ள மே 31-ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் கொல்லிமலை வனப்பகுதிக்குள் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி கேட்டு யாரும் அணுகுவதில்லை, அதே சமயத்தில் அனுமதி பெறாமலும் மலைக்குள் யாரும் செல்வதும் இல்லை. கடந்த ஆண்டு 3 மலையேற்றக் குழுக்கள் மட்டுமே அனுமதி கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். அவர்களுக்கு வனத்துறை அலுவலர்கள் வழிகாட்டுதலுடன் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இதுவரை யாரும் அனுமதி கேட்டு அணுகவில்லை.
நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி வனக் கோட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கொல்லிமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com