தூத்துக்குடியில் கன மழை; கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவு

இந்தியப் பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்திருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
தூத்துக்குடியில் கன மழை; கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பதிவு


தூத்துக்குடி: இந்தியப் பெருங்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்திருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் அதிகபட்ச மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் பெய்த அதிகப்படியான மழை அளவை எல்லாம் பின் தள்ளிவிட்டு, மார்ச் மாதம் பெய்திருக்கும் மழை அளவானது புதிய சாதனைப் பட்டியலில் சேர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி 24 மணி நேரத்தில் 180 மி.மீ. மழை பெய்ததே இதுவரை அதிகபட்ச மழை அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவானது: 
தூத்துக்குடி - 200 மி.மீ.
காயல்பட்டிணம் - 142 மி.மீ.
ஸ்ரீவைகுண்டம் - 95 மி.மீ.
திருச்செந்தூர் - 82 மி.மீ.

நெல்லை:
பாபநாசம் அணைப் பகுதி - 190 மி.மீ.
ராமநதி அணை - 130 மி.மீ.
கடனா அணை - 110 மி.மீ.
சேர்வலாறு அணை  - 102 மி.மீ.
தென்காசி - 86 மி.மீ.
மணிமுத்தாறு அணை - 68 மி.மீ.

அண்டை மாவட்டங்களாக திண்டுக்கல், கன்னியாகுமரியில் இன்று பிற்பகலில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தென் தமிழகத்தை விட்டு நகர்ந்து செல்லும். இது புயலாக வலுவடையும் என்று பரவும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com