பாம்பன், தூத்துக்குடியில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில்
பாம்பன், தூத்துக்குடியில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. 
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறும் சூழல் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலம் தற்போது லட்சத்தீவு மினிகாய் தீவு பகுதியில் இருந்து 480 கிலோ மீட்டர் தென்மேற்கு தொலைவிலும், திருவனந்தபுரத்தில் இருந்து 390 கிலோ மீட்டர் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் நகர்ந்து வருகின்றது. 
இந்நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கரையோர மக்களுக்கு மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் திடீர் காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடல் சீற்றம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து கடலூர் துறைமுகத்திற்கு செல்ல பாம்பன் துறைமுகம் வந்த மிதவை மற்றும் இழுவைக் கப்பல்களுக்கு பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல செவ்வாய்க்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com