பிரதமர் மோடிக்காக தூத்துக்குடியில் தயாரான வாழைநார் பட்டு நூல் உடை!

தூத்துக்குடியில் வாழைநார் பட்டு மூலம் தயாரான உடையை பிரதமர் மோடியிடம் மார்ச் 16ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த விஞ்ஞானி முருகன் வழங்குகிறார்.
பிரதமர் மோடிக்காக வாழைப் பட்டு நூல் மூலம் தயாரான உடையுடன் விஞ்ஞானி முருகன்.
பிரதமர் மோடிக்காக வாழைப் பட்டு நூல் மூலம் தயாரான உடையுடன் விஞ்ஞானி முருகன்.

தூத்துக்குடியில் வாழைநார் பட்டு மூலம் தயாரான உடையை பிரதமர் மோடியிடம் மார்ச் 16ஆம் தேதி தூத்துக்குடியைச் சேர்ந்த விஞ்ஞானி முருகன் வழங்குகிறார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் விஞ்ஞானி முருகன். இவர், வாழைத் தண்டு மடலில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கும் கருவியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்தார். மேலும், அந்தப் பட்டு நூல் மூலம் உடைகள் தயாரிக்க முடியும் என்பதையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், தில்லியில் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் 'கிஸான் உன்னதி மேளா' நிகழ்ச்சியில் விஞ்ஞானி முருகன் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளார். 
அந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மேளாவை திறந்து வைக்கிறார். அந்த நிகழ்ச்சியின்போது தான் வாழைப் பட்டு நூல் மூலம் தயாரித்த உடையை பிரதமர் மோடியிடம் வழங்க விஞ்ஞானி அனுமதி பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
அறுவடைக்குப் பிறகு விவசாயக் கழிவாக மாறும் வாழை மடலில் இருந்து பட்டு நூலிழைகள் பிரிக்கப்பட்டு ஆடைகளாக நெய்து 'கோட்' ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த உடையை (கோட்) பிரதமரிடம் 16 ஆம் தேதி வழங்குகிறேன். மேலும், அங்கு நடைபெறும் கண்காட்சியில் வாழைப் பட்டு நூல் பிரித்தெடுக்கும் முறை குறித்தும் செயல்விளக்கம் அளிக்கிறேன். தொடர்ந்து, 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எனது கண்டுபிடிப்பு குறித்து விளக்குகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com