புதுவையில் தொழில்முனைவோருக்கான 3 நாள் பயிற்சி முகாம்

விவசாயிகள் மற்றும் புதிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் நாட்டுப் பசுக்களைப் பயன்படுத்தி பஞ்சகவ்ய பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி முகாம் புதுச்சேரியில் மூன்று நாள்கள்

விவசாயிகள் மற்றும் புதிய தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் நாட்டுப் பசுக்களைப் பயன்படுத்தி பஞ்சகவ்ய பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி முகாம் புதுச்சேரியில் மூன்று நாள்கள் நடத்தப்படுகிறது. 
புதுச்சேரி ஆனந்தம்-ஆநிரை ஆலயம், ஜீவராசி அறக்கட்டளை மற்றும் தாத்தா-பாட்டி பரம்பரை சுதேசிய இயற்கை நிலையம் இணைந்து நடத்தும் இப்பயிற்சி முகாம், வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) தொடங்கி 18 வரை புதுச்சேரி மாநிலம் பாக்குமுடையான்பட்டில் அமைந்துள்ள ஆநிரை ஆலயத்தில் நடைபெறுகிறது.
கோமாதாக்களின் அமிர்தமான பால், கோமியம், கோஜல் ஆகியவற்றில் இருந்து பல்வேறு மருத்துவ குணமுள்ள பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், தூபம், மூலிகை சோப்பு, பல்பொடி, இயற்கை பெனாயில், கொசுவர்த்திச் சுருள், கொசு மருந்து, வலி நிவாரணி, முக அலங்காரப் பூச்சு, மூலிகை ஷாம்பு, மூலிகை எண்ணெய், அமிர்தஜெல், பூச்சு விரட்டி, சஞ்சீவினி, இயற்கை உரம் ஆகியவற்றை தயாரிக்கப் பயிற்சிகள் அளிப்பதுடன், பசு பராமரிப்பு, எளிய விவசாய முறைகள் ஆகியவையும் கற்றுத் தரப்படுகிறது. நாட்டுப் பசு வளர்ப்போர், பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்வோர், வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளோர், பால் பொருள்கள் தயாரிப்பாளர், சுதேசிய சிந்தனையாளர்கள் என அனைவரும் இம் முகாமில் 3 நாள்களும் தங்கிப் பயிற்சி பெறலாம்.
ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி ராகவன்கென் தலைமையில் இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக விவரம் பெற விரும்புவோர், ராசி ராமலிங்கத்தை 93454 05060, 75022 27000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com