மேட்டூர் அணை தூர் வாருவதை கண்காணிக்க குழு: அன்புமணி வலியுறுத்தல்

மேட்டூர் அணையைத் தூர் வாருவதைக் கண்காணிக்க விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணையைத் தூர் வாருவதைக் கண்காணிக்க விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணையைத் தூர்வாரியதால் ஏற்பட்ட, ஏற்படப் போகும் நன்மைகள் குறித்து நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
மேட்டூர் அணை 84 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படுவதால் அதன் கொள்ளளவு 10 முதல் 15 டி.எம்.சி. அளவுக்கு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். அணையிலிருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்றதால் சேலம் மாவட்டத்தில் விளைச்சல் அதிகரித்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இவற்றில் எதுவுமே உண்மையில்லை.
தூர்வாரும் பணி என்பது மொத்தம் 59.25 சதுர மைல் பரப்பளவுக்கு விரிந்து கிடக்கும் நீர்த்தேக்கப் பகுதி முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அணைப்பகுதியில் தரமான வண்டல் மண் கிடைத்த இடங்களில் மட்டுமே தூர்வாரப்பட்டது. அதுவும் ஒரே சீராக மண்ணை அல்லாமல் 30 அடி ஆழத்துக்கு கிணறு போலத் தோண்டி மண் எடுக்கப்பட்டது. மேட்டூர் அணையில் நடைபெற்றது தூர் வாரும் பணி அல்ல; வண்டல் மண் கொள்ளை ஆகும். 
நிகழாண்டில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில்தான் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com