தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
கோபி, பெரியார் திடலில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில், பவானி சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.வி.ராமநாதன் உள்ளிட்ட பலர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: 
பாஜக இந்தியாவில் தற்போது 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. கர்நாடகத்திலும் பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும். வருங்காலத்தில் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும். 50 ஆண்டு காலம் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால், அதில் அவர்கள் ஊழல் செய்ததுதான் அதிகம். 
தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தைப் புதியவர்கள் வந்துதான் நிரப்ப வேண்டும் என்பது இல்லை. குறிப்பாக திரைப்படத் துறையினர் வந்துதான் நிரப்ப வேண்டும் என்பது இல்லை.
தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடத்த வேண்டும் .
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்குத் தனித் திட்டத்தை தமிழக அரசு தயாரிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com