பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் பெண் கமாண்டோக்கள்: ரயில்வே ஐ.ஜி. பாரி தகவல்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. எஸ்.சி. பாரி தெரிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக கூடுதல் பெண் கமாண்டோக்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. எஸ்.சி. பாரி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்தில் புதன்கிழமை, பல்வேறு ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
ரயில் நிலையங்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்கிறோம். 182 என்ற உதவி எண் மூலம் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கும் பயணிகளை உடனே அணுகி பிரச்னைகளைத் தீர்க்கிறோம். 
தெற்கு ரயில்வே முழுவதும் பிரச்னைகளிலிருந்து பயணிகளைக் காக்கவும், குற்ற சம்பவங்களைத் தடுக்கவும் பாதுகாப்புப் படையினர் 4,200 பேர் பணியாற்றி வருகின்றனர்.
நிகழாண்டை பெண்களின் பாதுகாப்பு ஆண்டாகக் கொண்டாடிவருகிறோம். பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆர்.பி.எஃப். பணியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கூடுதலாக பெண் கமாண்டோக்களைத் தேர்வு செய்ய மத்திய ரயில்வே பாதுகாப்புப் படைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை, இருப்புப் பாதை பாதுகாப்பு உள்ளிட்டவை கண்காணிக்கப்படுகின்றன. மேலும், சென்னைக் கோட்டத்தில் 86 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வே முழுவதும் 136 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருநெல்வேலி ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகின்றன. ரயில் நிலையங்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முழு பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com