டாஸ்​மாக் வரு​வாய் ரூ.500 கோடி குறை​யும்: நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லர் சண்​மு​கம்

டாஸ்​மாக் நிறு​வ​னத்​தின் ஆயத்​தீர்​வை​கள் மூல​மா​கக் கிடைக்​கும் வரு​வாய் ரூ.500 கோடி அள​வுக்​குக் குறை​யும் என்று நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் தெரி​வித்​துள்​ளார்.
டாஸ்​மாக் வரு​வாய் ரூ.500 கோடி குறை​யும்: நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லர் சண்​மு​கம்

டாஸ்​மாக் நிறு​வ​னத்​தின் ஆயத்​தீர்​வை​கள் மூல​மா​கக் கிடைக்​கும் வரு​வாய் ரூ.500 கோடி அள​வுக்​குக் குறை​யும் என்று நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் தெரி​வித்​துள்​ளார்.

டாஸ்​மாக் மூல​மாக ரூ.6,900 கோடி அள​வுக்கு வரு​வாய் கிடைக்​கும் என்று எதிர்​பார்த்த நிலை​யில், நிகழ் நிதி​யாண்​டில் வரு​வாய் ரூ.6,488 கோ​டி​யாக இருக்​கும் என்று மதிப்​பி​டப்​பட்​டுள்​ளது.

சட்டப் பேர​வை​யில் வரும் நிதி​யாண்​டுக்​கான நிதி​நிலை அறிக்​கையை துணை முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வியா​ழக்​கி​ழமை தாக்​கல் செய்​தார். நிதி​நிலை அறிக்​கை​யில் உள்ள முக்​கிய அம்​சங்​கள் குறித்து, நிதித் துறை கூடு​தல் தலை​மைச் செய​லா​ளர் க.சண்​மு​கம் அளித்த பேட்டி:

ரூ.17,490 கோடி பற்​றாக்​கு​றை:​ வர​வு-​செ​ல​வுத் திட்டத்​தின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்​சத்து 43 ஆயி​ரத்து 847 கோடி​யா​கும். அதில், வரு​வாய் வர​வு​கள் ரூ. 1 லட்​சத்து 76 ஆயி​ரத்து 251 கோடி. வரு​வாய் செல​வு​கள் 1 லட்சத்து 93 ஆயி​ரத்து 742 கோடி. இத​னால், வரு​வாய்ப் பற்​றாக்​குறை ரூ.17 ஆ​யி​ரத்து 490 கோடி​யாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.
முத​லீட்​டுச் செல​வு​கள் ரூ.26 ஆ​யி​ரத்து 90 கோடி என கணிக்​கப்​பட்​டுள்​ளது. நிதிப் பற்​றாக்​குறை ரூ.44 ஆ​யி​ரத்து 481 கோடி​யாக இருக்​கும். இது மாநில மொத்த உற்​பத்தி மதிப்​பில் 2.79 சத​வீ​த​மாக இருக்​கும். கடன் அளவு மாநில மொத்த உற்​பத்​தி​யில் 22.29 சத​வீ​த​மாக இருக்​கும். இது நிர்​ண​யிக்​கப்​பட்ட அள​வா​கும். 
​வீட்டு வச​தித் திட்டங்​கள்:​ நகர்ப்​புற மேம்​பாட்​டுக்​காக மத்​திய அர​சின் அம்​ருதி, பொலி​வுறு நக​ரங்​கள் திட்டங்​கள் செயல்​ப​டுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இத​னால், மாநில அர​சின் சென்னை பெரு​ந​கர மேம்​பாட்​டுத் திட்ட​மும், நகர்ப்​புற மேம்​பாட்​டுத் திட்ட​மும் நிறுத்​தப்​பட்​டி​ருந்​தன. வரும் நிதி​யாண்டு முதல் அவை மீண்​டும் செயல்​ப​டுத்​தப்​ப​டும். இதற்​காக சென்​னைக்கு ரூ.500 கோ​டி​யும், பிற நக​ரங்​க​ளுக்​காக ரூ.750 கோ​டி​யும் என ரூ.1,250 கோடி கூடு​த​லாக நிதி ஒதுக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. 
​சா​த​க​மான நிலை:​ பொது​வாக மாநி​லத்​தின் பொரு​ளா​தார வளர்ச்​சி​யில் சாத​க​மான மாற்​றம் தென்​ப​டு​கி​றது. 2016-17-ஆம் நிதி​யாண்​டில் 7.42 சத​வீ​த​மாக இருந்​தது. 2017-18-ஆம் ஆண்​டில் அது 8.02 சத​வீ​த​மாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டது. வரும் ஆண்​டில் மேலும் உயர்ந்து 9 சத​வீ​தத்​தைத் தாண்​டக் கூடிய வகை​யில் இருக்​கும். இதன் கார​ண​மாக, வரி வரு​வா​யி​லும் வளர்ச்​சி​கள் காணப்​ப​டும்.
மது​வி​லக்கு ஆயத்​தீர்வை தவிர மற்ற இனங்​க​ளில் வளர்ச்சி எதிர்​பார்த்த அள​வுக்கு இருக்​கி​றது. இந்த நிலை தொட​ரும் என கரு​து​கி​றோம். அரசு அலு​வ​லர்​க​ளுக்​கான ஊதி​யம், உதய் திட்டத்​தால் கூடு​தல் நிதிச் சுமை​கள் ஏற்​பட்​டன. வரும் காலத்​தில் கிடைக்​கும் கூடு​தல் நிதி ஆதா​ரங்​கள் வழி​யாக சரி செய்​யப்​பட்டு, வரு​வாய்ப் பற்​றாக்​கு​றை​யைக் குறைக்க அரசு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கும்.
நிதிப் பற்​றாக்​கு​றை​யும், கடன் அள​வும் நிர்​ண​யிக்​கத்​தக்க அள​வில் கட்டுக்​குள்ளே இருக்​கி​றது. வரு​வாய் வர​வு​கள் அதி​க​ரிக்​கும் பட்சத்​தில் பற்​றாக்​குறை மேலும் குறை​யும். 14-வது நிதிக் குழுப் பரிந்​து​ரை​கள் அடிப்​ப​டை​யில், தமி​ழ​கத்​துக்​குக் கிடைத்த வரி வரு​வாய் பங்கு என்​பது மிகக் குறை​வா​கும். அதே​ச​ம​யம், மத்​திய அரசு அளித்த நிதி​யா​னது 32 சத​வீ​தத்​தில் இருந்து 42 சத​வீ​த​மாக உயர்த்​தப்​பட்​டது. 
நிதியை உயர்த்​தி​னா​லும் வரிப் பகிர்​வில் நமக்​கான பங்​கி​னைக் குறைத்​த​தால் எந்​தப் பல​னும் கிடைக்​க​வில்லை. இதற்​காக மத்​திய அரசை தொடர்ந்து வலி​யு​றுத்தி வரு​கி​றோம். உரிய பங்​கி​னைக் கோரி வரு​கி​றோம். இல்​லா​விட்​டால் திட்டங்​க​ளுக்கு செல​வி​டப்​ப​டும் நிதி​யை​யா​வது வழங்க வேண்​டு​மெ​னக் கூறி​யுள்​ளோம்.
ரூ.44 ஆயி​ரம் கோடி:​ வரும் நிதி​யாண்​டி​லும் ரூ.44 ஆ​யி​ரம் கோடி கடன் வாங்க உத்​தே​சித்​துள்​ளோம். கடன் அள​வைப் பொருத்​த​வரை மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் எத்​தனை சத​வீ​தம் என்​ப​தைப் பொருத்தே நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது. 
ஜி.எஸ்.டி. நடை​மு​றைக்கு முன்​பாக, ஏப்​ரல் முதல் ஜூன் வரை​யில் வரு​வாய் வளர்ச்சி என்​பது 6.96 சத​வீ​த​மாக இருந்​தது. 
ஜி.எஸ்.​டி.-க்​குப் பிறகு (ஜூலை முதல் பிப்​ர​வரி) 7.04 சத​வீ​த​மாக உள்​ளது. இந்த நிதி​யாண்​டில் ஒட்டு​மொத்​த​மாக 15.45 சத​வீ​த​மாக இருக்​கும் என மதிப்​பி​டப்​ப​டு​கி​றது. அதா​வது எதிர்​பார்த்​ததை விட, 4 முதல் 5 சத​வீ​தம் உயர்வு உள்​ளது. அவற்​றில் 3 முதல் 4 சத​வீ​தம் என்​பது ஜி.எஸ்.டி. அம​லாக்​கத்​தால் கிடைத்​தி​ருக்​கும் எனக் கணிக்க வேண்​டி​யுள்​ளது. இது ஜி.எஸ்.டி. அம​லாக்​கத்​தால் மாநி​லத்​துக்கு கிடைத்த பய​னா​கும்.
வரி வரு​வாய் என்​பது ரூ.99 ஆ​யி​ரத்து 590 கோடி​யாக இருக்​கும் என மதிப்​பி​டப்​பட்​டி​ருந்​தது. ஆனால், இந்த நிதி​யாண்டு முடி​வ​டை​யும் காலத்​தில் ரூ.98 ஆ​யி​ரத்து 693 கோடி ரூபா​யாக இருக்​கும் எனத் தெரிய வரு​கி​றது. அதா​வது எதிர்​பார்த்​த​தை​விட, ரூ.900 கோடி ரூபாய் அள​வுக்கு வித்​தி​யா​சம் உள்​ளது. மது​வி​லக்கு மற்​றும் ஆயத்​தீர்​வுத் துறை​யில் வரு​வாய் குறைந்​தது ஒரு கார​ண​மா​கும்.
அதே​ச​ம​யம், பத்​தி​ரப்​ப​திவு, முத்​தி​ரைத் தாள்​கள் கார​ண​மாக வரு​வாய் அளவு உயர்ந்து வரு​கி​றது. எதிர்​பார்த்​ததை விட கூடு​த​லா​கக் கிடைத்து வரு​கி​றது. ரூ.1,600 கோடி கூடு​த​லா​கக் கிடைக்​கும் என கணிக்​கப்​ப​டு​கி​றது. பெட்ரோ​லி​யப் பொருள்​களை ஜி.எஸ்.​டி.-க்​குள் கொண்டு வர எதிர்க்​கி​றோம். அது​தான் மாநில அர​சுக்​கான வரி வரு​வாய் முது​கெ​லும்​பா​கும். பெட்ரோ​லி​யப் பொருள்​களை ஜி.எஸ்.​டி.க்​குள் கொண்டு வந்​தால் மக்​கள் பயன் அடை​வார்​கள் என்​றா​லும், வரி வரு​வாய்​க​ளைக் கொண்டே அரசு நிர்​வா​கத்தை நடத்த வேண்​டி​யுள்​ளது.
​அம்மா உண​வ​கம் திட்டம்: ​அம்மா உண​வ​கத் திட்டத்​துக்கு அரி​சியை இல​வ​ச​மா​கக் கொடுக்​கி​றோம். பருப்பு போன்ற பொருள்​கள் ரேஷன் மானிய விலை​யிலே கொடுக்​கி​றோம். அம்மா உண​வ​கங்​களை நிர்​வ​கிப்​பது உள்​ளாட்சி அமைப்​பு​க​ளா​கும். இப்​போது இழப்பு ஏற்​ப​டு​வ​தா​கக் கூறு​கி​றார்​கள். இதனை ஆய்வு செய்ய முதல்​வர் உத்​த​ர​விட்​டுள்​ளார். அது ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கி​றது.
​ச​மூ​கத் திட்டங்​க​ளுக்கு ரூ.72,000 கோ​டி:​ தமி​ழ​கத்​தில் இல​வ​சத் திட்டங்​கள் எது​வுமே கிடை​யாது. அர​சின் பல சமூ​கத் திட்டங்​க​ளுக்​காக ரூ.72 ஆ​யி​ரம் கோடி ரூபாய் வரை செல​வி​டப்​ப​டு​கி​றது.
அதில், சத்​து​ணவு, ஒருங்​கி​ணைந்த குழந்​தை​கள் மேம்​பாட்டு வளர்ச்​சித் திட்டம், வீட்டு வசதி, வேளாண்மை என அனைத்​துத் திட்டங்​க​ளும் அடங்​கும். அவற்​றில் சமூ​கத்​துக்கு எந்​தத் திட்டம் தேவை​யில்லை எனக் குறிப்​பிட்​டால் அரசு அத​னைப் ப​ரி​சீ​லிக்​கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com