அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கம்

அதிமுக செய்தித் தொடர்பாளர் கே.சி.பழனிசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, 
ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். 
அதன் விவரம்: திருப்பூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.,யும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கே.சி.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
கட்சியின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்ததாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதிமுக அதனை ஆதரிக்கும் என்ற வகையில் ஊடகங்களில் கே.சி.பழனிச்சாமி கருத்துத் தெரிவித்தார். இதையடுத்து, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று, அண்மையில் ஊடகங்களில் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்த அதிமுகவின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான தீரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com