சட்டப்பேரவையில் எதையும் எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் ஜெயக்குமார் அறைகூவல்!

திங்களன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் எந்தப் பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
சட்டப்பேரவையில் எதையும் எதிர்கொள்ளத் தயார்: அமைச்சர் ஜெயக்குமார் அறைகூவல்!

சென்னை: திங்களன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் எந்தப் பிரச்னை வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் ஞாயிறன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

காவிரி பிரச்னையில் தமிழக உரிமையைக் காக்க அதிமுக ஏராளமான போராட்டங்களை நடத்தியது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தை 10 நாட்களுக்கு மேல் அதிமுக முடக்கியுள்ளது.  

ஆனால் 17 வருடங்களுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக இந்த விவகாரத்தில் என்ன செய்துள்ளது? 

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ராஜிநாமாவைத் தவிர மற்ற வகைகளில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்

கட்சியை விட்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தன்னை கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறெல்லாம் பேசிக் கூடாது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும், கட்சியை நடத்தும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்கியுள்ளது. கட்சி நிர்வாகிகள் வரையறைக்கு உட்பட்டு பேச வேண்டும்.

கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் 1000 பேசுவார்கள். தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு பதில்கூற விரும்பவில்லை.    

திங்களன்று தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மற்றும் காவிரி உள்ளிட்ட  பிரச்சனைகள் எழுப்பப்பட்டாலும் அதனை எதிர்கொள்ளத் தயார்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com