தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன்: சந்திப்புக்குப் பின்னர் கவிஞர் வைரமுத்து உருக்கம்! 

தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன் என்று மருத்துவமனையில் நடராஜனைச் சந்தித்த பின்பு    கவிஞர் வைரமுத்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன்: சந்திப்புக்குப் பின்னர் கவிஞர் வைரமுத்து உருக்கம்! 

சென்னை: தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன் என்று மருத்துவமனையில் நடராஜனைச் சந்தித்த பின்பு    கவிஞர் வைரமுத்து உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, நுரையீரல் அழற்சி ஆகிய பிரச்னைகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் முகமது ரேலா தலைமையிலான மருத்துவக் குழுவினர், கடந்த அக்டோபர் 4-ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் கல்லீரல்-சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர்.

கல்லீரல் பாதிப்பு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவக் கண்காணிப்பு மைய இயக்குநர் டாக்டர் கே.இளங்குமரனின் தீவிர மருத்துவக் கண்காணிப்பின்கீழ் குணமடைந்த அவர், மருத்துவமனையிலிருந்து கடந்த நவம்பர் மாதம் வீடு திரும்பினார்.

கடும் நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக தற்போது  அவர் மீண்டும் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் நடராஜனை கவிஞர் வைரமுத்து திங்ககன்று சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து கூறியதாவது:

தமிழால் எனக்கு உறவானவர் அண்ணன் நடராஜன். எனவேதான் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க வந்திருந்தேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார். தற்பொழுது அவருக்கு புதிய முறையில் உயரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதாக மருத்துவர்கள்  என்னிடம் தெரிவித்தனர்.

சுருக்கமாக அவருடைய உடல்நிலையானது நேற்றை விட நல்ல முறையில் உள்ளது.

இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com