தனிப்பட்ட காரணங்களாலேயே காவலர்கள் தற்கொலை: முதல்வர்

காவலர்கள் அவர்களின் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் விளக்கம் அளித்தார்.
தனிப்பட்ட காரணங்களாலேயே காவலர்கள் தற்கொலை: முதல்வர்

காவலர்கள் அவர்களின் தனிப்பட்ட பிரச்னையின் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் விளக்கம் அளித்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசும்போது, தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்ளும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் காவலர் அருண்ராஜும், அயனாவரம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சதீஷ்குமாரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு ரங்கநாதன் பேசினார்.
அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது: தனிப்பட்ட பிரச்னையின் காரணமாகவே இருவரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. காவலர்களின் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதிலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 
காவலர்கள் அனைவருக்கும் கூடுமானவரை வாராந்திர ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரங்களில் பணி நேரம் வரன்முறைப்படுத்தப்பட்டு, இயன்ற அளவில் 8 மணி நேர பணி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உடல் நலத்தைப் பேணிக் காக்க அவர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சியுடன், யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல தனியார் மருத்துவமனைகள் மூலம் அவ்வப்போது காவல் அலுவலகம் மற்றும் காவலர் குடியிருப்புகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, குடும்பப் பிரச்னை, உடல் நலக் கோளாறு, காதல் விவகாரம் உள்ளிட்ட தனிப்பட்ட பிரச்னையின் காரணமாகத்தான் காவலர்கள் தற்கொலை செய்து வருகின்றனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com